இந்தியா-லக்ஸம்பர்க் இணைய வழி உச்சி மாநாடு
November 25 , 2020
1724 days
697
- இந்தியாவும் லக்ஸம்பர்க்கும் கடந்த இருபது ஆண்டுகளில் முதல்முறையாக ஓர் தனித்த உச்சி மாநாட்டை நடத்தியுள்ளன.
- அமெரிக்கா மற்றும் மொரீஷியஸுக்கு அடுத்தபடியாக லக்ஸம்பர்க் நாடானது வெளிநாட்டு நிதி முதலீடுகளுக்கான மூன்றாவது பெரிய மூலமாகும்.
- லக்ஸம்பர்க் உலகின் இரண்டாவது பணக்கார நாடாகும்.
- லக்ஸம்பர்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று முக்கிய குறைந்த வரி விதிப்பு (Tax Haven) கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
- மற்ற இரு நாடுகள் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகும்.
- Tax Haven என்பது மிகக் குறைந்த கட்டணத்தில் வரி விதிக்கும் ஒரு நாட்டைக் குறிக்கின்றது.

Post Views:
697