TNPSC Thervupettagam

இந்தியா-வியட்நாம் நட்புறவு ஆண்டு – 2027

September 19 , 2026 8 hrs 0 min 40 0
  • இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு தூதரக உறவுகளின் 55வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டை "இந்தியா-வியட்நாம் நட்புறவு ஆண்டாக" அனுசரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, வியட்நாம், இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையிலும், இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தில் இந்தியாவின் 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வையிலும் ஒரு முக்கியப் பங்காளியாகும்.
  • ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) உடனான நமது விரிவான உத்திசார் கூட்டாண்மை கட்டமைப்பிலும் வியட்நாம் ஒரு முக்கியப் பங்காளியாகும்.
  • இரு நாடுகளும் தங்களது உறவை மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தியுள்ளன.
  • இப்பிராந்தியத்தில் அந்த மட்டத்தில் நாம் இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ள முதல் நாடு வியட்நாம் ஆகும்.
  • பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணைகளை வழங்குவதற்காக வியட்நாமுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
  • இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சிக்கு 'எக்சர்சைஸ் வின்பாக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்