TNPSC Thervupettagam

இந்தியா – ரஷ்யா 2+2 அமைச்சரவைகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை

May 3 , 2021 1565 days 649 0
  • சமீபத்தில் 2+2 என்ற அமைச்சரவைகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • “2+2 எனும் அமைச்சரவைகளுக்கு இடையேயான பேச்சுவார்தையானதுபாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆகியோரிடையே மேற்கொள்ளப் படும் ஒரு பேச்சுவார்த்தை முறை ஆகும்.
  • இந்தியா இது போன்ற பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் மேற்கொள்கிறது.
  • இந்திய நாடானது இம்மாதிரியில் பேச்சுவார்தை மேற்கொள்ளும் முதல் குவாட் (QUAD) அமைப்பின் உறுப்பினரல்லாத நாடு ரஷ்யாவாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டினை நடத்துவதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
  • இந்த உச்சி மாநாடு இந்தியாவில் ஒருமுறையும் மற்றொரு முறை ரஷ்யாவிலும் என மாறி மாறி நடத்தப்படுகிறது.
  • தற்போது இந்தியாவிற்கு அதிகளவில் பாதுகாப்புக் கருவிகளை வழங்கும் நாடு ரஷ்யாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்