இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 என்ற வாக்குகள் பெற்ற நிலையில் இவர் 528 வாக்குகள் (72.8%) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கடந்த ஆறு துணைத் தலைவர் தேர்தல்களிலேயே 2017 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 346 வாக்குகளைப் பெற்ற அவரது முன்னோடியான நாயுடு அவர்களின் வெற்றிச் சாதனையினை அடுத்து ஜக்தீப் அவரை விட 2% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
1992 ஆம் ஆண்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றச் சாதனையானது K.R.நாராயணன் அவர்களையேச் சாரும்.
சுயேச்சை வேட்பாளர் ஆன காக்கா ஜோகிந்தர் சிங்கிற்கு எதிராக போட்டியிட்ட இவர் மொத்தம் பதிவான 701 வாக்குகளில் 700 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஜக்தீப் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் மூலம் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்க உள்ளார்.
இவர் இதற்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.