செப்டம்பர் 09 ஆம் தேதியன்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக C.P. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் எதிர்க் கட்சியான INDIA கூட்டணியின் வேட்பாளர் நீதிபதி B. சுதர்ஷன் ரெட்டியை 452 முதல் நிலை விருப்பத் தேர்வு வாக்குகளைப் பெற்று தோற்கடித்தார்.
ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி முதல் குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் பணியாற்றிய அவர், முன்பு ஜார்க்கண்ட், தெலுங்கானா (கூடுதல் பொறுப்பு) மற்றும் புதுச்சேரி (கூடுதல் பொறுப்பு) ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்தார்.
கோவை தொகுதியிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், RSS மற்றும் பாரதிய ஜன சங்கத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர் பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும், பாராளுமன்ற நிலைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, அவர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் உள்ள கயிறு வாரியத்திற்குத் தலைமை தாங்கினார்.
2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், அவர் கேரளாவிற்கான பாஜக கட்சியின் பொறுப்பாளராக இருந்தார் மற்றும் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான சர்வதேசப் பிரதிநிதிகளை வழிநடத்தினார்.