இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பு
June 22 , 2025 10 days 62 0
மத்திய அரசானது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான நிர்ணயிக்கப் பட்ட தேதிகளை அறிவித்து அதிகாரப்பூர்வ அரசிதழினை வெளியிட்டது.
ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சாதி வாரியான எண்ணிக்கை கணக்கெடுப்புடன் கூடிய இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது 2027 ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் தேதியன்று மேற்கொள்ளப்படும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட தேதியானது 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் நாளின் 00.00 மணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியப் பிரதேசமான லடாக் மற்றும் பனிப்பொழிவு காணப்படும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைச் சாத்தியமற்ற ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பகுதிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டத் தேதி 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று 00:00 மணி ஆக இருக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது, இந்தியாவின் வரலாற்றில் அலைபேசிச் செயலிகள், இணைய தளம் சார்ந்த வகை சுயக் கணக்கெடுப்பு மற்றும் நிகழ்நேர வகை கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற முதல் எண்ணிம அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும்.
இது 1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதல் முறையாக அனைத்துச் சமூகங்களுக்குமான சாதித் தரவுகளை சேகரிக்கவும் உள்ளது.
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆனது மிகவும் முதல் முறையாக சுயப் பதிவை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க இணைய தளங்களில் பதிவு செய்து அதன் பிறகு இதில் உள்நுழையலாம் அல்லது தங்கள் சொந்த விவரங்களை நிரப்ப வேண்டி ஒரு செயலியைப் பயன்படுத்தலாம்.
சுயமானப் பதிவுகள் முடிந்ததும், இந்த அமைப்பு ஆனது ஒரு பெரும் தனித்துவமான அடையாளக் குறியீட்டினை உருவாக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் தங்கள் வீட்டிற்கு வரும் போது சுயமானப் பதிவில் பங்கு கொண்ட நபர்கள் இந்த அடையாளக் குறியீட்டினை வழங்கினால் போதும்.
2011 ஆம் ஆண்டில் நில வரைபடங்கள் மற்றும் அதற்கான இடங்களின் பட்டியல்களை பயன்படுத்தியிருந்தாலும், 2027 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஆனது வீடுகளின் GPS குறியிடல் மற்றும் அதன் மீதான பரவல் இடைவெளிகளைத் தவிர்க்க என்று மெய்நிகர் அடைப்படையிலான புவியியல் பரவல் தடுப்பு அமைத்தல் ஆகியவற்றை அறிமுகப் படுத்துகிறது.
2027 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பாளர்கள் மாறுபட்ட வயது அல்லது நம்பத்தகாத குடும்ப எண்ணிக்கை அளவு போன்ற சில பிழைகளுக்கு எச்சரிக்கைகளைப் பெறுவர் என்ற நிலையில் இது நிகழ்நேரத் திருத்தங்களைச் சாத்தியமாக்கும்.
புலம்பெயர்வுக்கான காரணங்களின் கீழ் பருவநிலை நிகழ்வுகள் அல்லது இயற்கைப் பேரழிவுகள் காரணமான புலம் பெயர்வு ஆகிய புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.