2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதியன்று, மூன்று ஆண்டு கால பணிக் காலத்திற்கு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியின் தலைமையின் கீழ் 22வது சட்ட ஆணையம் அமைக்கப் பட்டது.
மத்திய அமைச்சரவை தற்போது 22வது சட்ட ஆணையத்தின் பணிக் காலத்தினை மேலும் ஒன்றரை ஆண்டுக்கு (ஆகஸ்ட் 31, 2024 வரை) நீட்டித்துள்ளது.
"இனி எந்த வகையிலும் பொருந்தாத" சட்டங்களைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்யப் பரிந்துரைப்பதே இந்த ஆணையத்தின் பணியாகும்.
சட்ட ஆணையம் என்பது அவ்வப்போது மத்திய அரசால் அமைக்கப்படுகின்ற சட்டப் பூர்வமற்ற அமைப்பாகும்.
21வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் ஆனது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று நிறைவடைந்தது.