இந்தியாவின் 2வது பெரிய நகை வணிக இட குத்தகை சந்தை - சென்னை
May 16 , 2026 25 days 186 0
CBRE தெற்காசியா பிரைவேட் லிமிடெட் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சென்னை இந்தியாவின் இரண்டாவது பெரிய நகை வணிக இட குத்தகை சந்தையாக உருவெடுத்தது.
2024 ஆம் ஆண்டில் 16 சதவீதமாக இருந்த இந்தியாவின் நகைவணிக இட குத்தகை நடவடிக்கையில் சென்னை 2025 ஆம் ஆண்டில் 27 சதவீதமாகப் பங்களித்து உயர்ந்து உள்ளது.
இந்த நகரம் 2023-2025 காலகட்டத்தில் நகை வணிகங்களுக்கு மொத்தமாக சுமார் 0.25 மில்லியன் சதுர அடி இடத்தை குத்தகைக்கு விடப்பட்ட அளவாக பதிவு செய்துள்ளது.
முக்கிய குத்தகை நடவடிக்கைகள் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி-NCR மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் குவிந்துள்ளன, இவை மொத்த குத்தகை அளவில் 90% க்கும் அதிகமாகப் பங்களித்தன.
தி.நகர், அண்ணா நகர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகள் அதிக வாடகை தேவையுடன் கூடிய முக்கிய சில்லறை விற்பனை இடங்களாகத் தொடர்கின்றன.