குவாண்டம் குறியாக்கப் பகிரல் நுட்பமானது (QKD) இரகசிய குறியாக்க விசைகளை பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ள குவாண்டம் இயற்பியலைப் பயன்படுத்துகிறது.
இந்த வலையமைப்பினை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) தேசிய குவாண்டம் திட்டத்தின் (NQM) கீழ் QNu லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது.
இது ஃபோட்டான்களை (ஒளி துகள்கள்) ஒளியிழைகள் மூலம் அனுப்பி, தரவை குவாண்டம் பிட்களாக (குபிட்கள்) குறியாக்கம் செய்கிறது.
ஃபோட்டான்களை இடைமறிக்கும் எந்தவொரு முயற்சியும் அவற்றின் நிலையை மாற்றுவதால், தொடர்பு கொள்ளும் தரப்பினருக்கு இது எச்சரிக்கை அளிக்கிறது.
500 கிமீ வலையமைப்பு நம்பகமான முனைகள், குவாண்டம் சுரக்சா கவாச் வன்பொருள் மற்றும் குறியாக்கத்திற்காக குவாண்டம் ரேண்டம் எண் உருவாக்க (QRNG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.