இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி D.Y. சந்திரசூட் பொறுப்பேற்றார்.
உதய் உமேஷ் லலித் அவர்களுக்குப் பிறகு, அவர் இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார்.
அயோத்தி நில ப்பிரச்சனை, தனியுரிமை மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான உரிமை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு அரசியலமைப்பு அமர்வுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளில் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
இவரது தந்தை Y.V. சந்திரசூட் அவர்களும் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணி ஆற்றியுள்ளார்.
இந்திய நாட்டின் நீதித்துறை வரலாற்றில் தலைமை நீதிபதிப் பதவியில் இடம் பெற்ற ஒரே தந்தை-மகன் இணையர் இவர்களே ஆவர்.