இந்தியாவின் 77வது குடியரசு தினம் – முக்கிய அம்சங்கள்
January 29 , 2026 2 days 52 0
புது தில்லியின் கர்த்தவ்யா பாதையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெற்ற 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இணைந்து தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, விமானப் படை துணை நிலை தளபதியான அக்சிதா தங்கர் வரலாறு படைத்துள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உர்சுலா வான் டெர் லேயன், இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற முதல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆவார்.
இவ்வருட குடியரசு தின அணிவகுப்பின் மையக் கருப்பொருள் ‘வந்தே மாதரம்’ என்பதாகும்.
முதன்முறையாக, இந்தியாவின் பாலைவன மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளை முன்னிலைப்படுத்தும் வகையில், ஒரு பாக்ட்ரியன் ஒட்டகம் (இரட்டைத் திமில் ஒட்டகம்) அணிவகுப்பில் சேர்க்கப்பட்டது.
குடியரசு தினம் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கிறது.