TNPSC Thervupettagam

இந்தியாவின் 96வது ராம்சர் ஈரநிலம்

December 16 , 2025 3 days 81 0
  • இராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள சிலிசெர் ஏரி, ராம்சர் தளமாக அறிவிக்கப் பட்டு, இந்தியாவின் 96வது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக மாறியுள்ளது.
  • சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோப்ரா நீர்த்தேக்கம், சத்தீஸ்கரின் முதல் ராம்சர் தளமாக உள்ளது.
  • சிலிசெர் ஏரியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் காணப் படுகின்றன என்பதோடு இதில் வலசை போகும் கொக்குகள் மற்றும் அங்கேயே வசிக்கும் மீன்கொத்திகள் அடங்கும்.
  • சிலிசெர் ஏரி 1845 ஆம் ஆண்டில் மகாராஜா வினய் சிங்கால் ஆல்வார் நகரத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டது.
  • ராம்சர் அந்தஸ்து, வளங்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் சார் சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் இந்த இரு பிராந்தியங்களிலும் ஒரு நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்