இந்தியா ஏற்க உள்ள G20 தலைமைத்துவத்தினைச் சரிவர மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் ஒட்டு மொத்தக் கொள்கை முடிவுகளை அமல்படுத்துவதற்கான பொறுப்பினை வகிக்கும் அதன் அறிக்கையிடல் அமைப்புகள் மற்றும் G20 செயலகம் ஆகியவற்றை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்திய நாடானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 வரையில் G20 அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்கும்.
இது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டுடன் நிறைவு அடையும்.
G20 என்பது உலகப் பொருளாதார நிர்வாகத்தில் முக்கியப் பங்கினை வகிக்கும் ஒரு சர்வதேச பொருளாதாரக் கழகத்திற்கான முதன்மை மன்றமாகும்.