மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாக்கள் தற்போது இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு நிலவரப் படி சுமார் 10.9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
சுமார் 4,094 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மாவட்டம், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2,469 மக்கள் மக்கள் தொகை அடர்த்தி கொண்டது.
இது கொல்கத்தா பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும் என்பதோடுஇது பராக்பூர் மற்றும் பிதான்நகர் போன்ற நகரங்களை உள்ளடக்கியது.
1947 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு விரைவான நகரமயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் அகதிகள் குடியிருப்புகள் அதன் மக்கள்தொகை வளர்ச்சிக்குப் பங்களித்தன.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அம்மாவட்டத்தில் சுமார் 84 சதவீத கல்வியறிவு விகிதம் பதிவானது.