இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு – பிப்ரவரி 2026
February 26 , 2026 183 days 324 0
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரி 13, 2026 அன்று முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 725.727 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
ஒரு வாரத்தில் இருப்பு 8.663 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் (FCA) 573.603 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனற அளவில் மிகப்பெரிய அங்கமாகும்.
தங்கத்தின் இருப்பு 128.466 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) 18.924 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன.
FCA என்பது அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவற்றில் உள்ள இருப்புக்களை உள்ளடக்கியது.
SDRகள் என்பது சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உருவாக்கப்பட்ட சர்வதேச இருப்பு சொத்துக்கள் ஆகும்.