இந்தியாவின் அருமண் இருப்புக்கள் மற்றும் உற்பத்தி இடைவெளி
January 1 , 2026 23 days 111 0
இந்தியா சுமார் 6.9 மில்லியன் டன் அருமண் ஆக்சைடு (REO) இருப்புடன் உலகளவில் 3வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய அருமண் இருப்புக்களில் இந்தியா சுமார் 6 முதல் 7 சதவீதத்தினைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய உற்பத்தியில் சுமார் 1% சதவீதத்திற்கும் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், இந்தியா 2,900 டன்களை மட்டுமே உற்பத்தி செய்ததுடன், அருமண் உற்பத்தியில் உலகில் 7வது இடத்தைப் பிடித்தது.
பெரும்பாலான இந்திய அருமண் இருப்புக்கள் தோரியமும் (கதிரியக்கக் கூறு) காணப் படுகின்ற மோனசைட் நிறைந்த கடலோர மணலில் உள்ளன.
கதிரியக்கத்தன்மை காரணமாக அந்த தனிமங்களின் சுரங்கம் கடுமையாக ஒழுங்கு படுத்தப் படுகிறது என்பதோடு மேலும் முக்கியமாக இது முன்னதாக இந்திய அருமண் தாது லிமிடெட் (IREL) நிறுவனத்தினால் கையாளப்பட்டது.
இந்தியாவில் மிகக் குறைந்தச் செயலாக்க மற்றும் சுத்திகரிப்பு வசதிகளே உள்ளதால், இது பெரிய அளவிலான உற்பத்தியை மெதுவாக்குகிறது.