TNPSC Thervupettagam

இந்தியாவின் அருமண் இருப்புக்கள் மற்றும் உற்பத்தி இடைவெளி

January 1 , 2026 13 days 93 0
  • இந்தியா சுமார் 6.9 மில்லியன் டன் அருமண் ஆக்சைடு (REO) இருப்புடன் உலகளவில் 3வது இடத்தில் உள்ளது.
  • உலகளாவிய அருமண் இருப்புக்களில் இந்தியா சுமார் 6 முதல் 7 சதவீதத்தினைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய உற்பத்தியில் சுமார் 1% சதவீதத்திற்கும் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், இந்தியா 2,900 டன்களை மட்டுமே உற்பத்தி செய்ததுடன், அருமண் உற்பத்தியில் உலகில் 7வது இடத்தைப் பிடித்தது.
  • பெரும்பாலான இந்திய அருமண் இருப்புக்கள் தோரியமும் (கதிரியக்கக் கூறு) காணப் படுகின்ற மோனசைட் நிறைந்த கடலோர மணலில் உள்ளன.
  • கதிரியக்கத்தன்மை காரணமாக அந்த தனிமங்களின் சுரங்கம் கடுமையாக ஒழுங்கு படுத்தப் படுகிறது என்பதோடு மேலும் முக்கியமாக இது முன்னதாக இந்திய அருமண் தாது லிமிடெட் (IREL) நிறுவனத்தினால் கையாளப்பட்டது.
  • இந்தியாவில் மிகக் குறைந்தச் செயலாக்க மற்றும் சுத்திகரிப்பு வசதிகளே உள்ளதால், இது பெரிய அளவிலான உற்பத்தியை மெதுவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்