TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆத்ம நிர்பர் பாரத் அபியான்

May 18 , 2020 1919 days 922 0
  • இந்தியாவின் நிதித் தொகுப்பானது முழுமையான அரசாங்கச் செலவிடல் அல்ல.
  • இந்த நிதித் தொகுப்பானது இந்திய ரிசர்வ் வங்கியின் செலவிடுதலையும் உள்ளடக்கியுள்ளது.
  • இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP – Gross Domestic Product) செலவிடல் சதவீதத்தின் அடிப்படையில் அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளினால் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகைக்கு அடுத்த இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • எனினும், அதன் மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் நிதித் தொகுப்பானது 19வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பெர்க் போன்ற சிறிய பொருளாதார நாடுகள் முறையே 20.7% மற்றும் 19.2% என்ற அளவில் தங்களது GDPயில் 5 சதவிகித அளவிலான பங்கைச் செலவிடுகின்றன.
  • இந்தத் தரவரிசையானது பொருளியலறிஞர் செய்குன் எல்ஜினால் வெளியிடப்பட்ட கோவிட் – 19 பொருளாதார ஊக்கக் குறியீட்டில் உள்ள தரவுகளை ஆராய்ந்த பின்னரே தயாரிக்கப் பட்டது. 
  • 20 இலட்சம் கோடி மதிப்பிலான கொரானா வைரஸ் நோய்க்கு எதிரான  ஊக்கத் தொகையானது கிரீஸ், நியூசிலாந்து, வியட்நாம், போர்ச்சுக்கல் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் GDPயை விட அதிகமாகும்.
  • இந்தியாவின் ஊக்கத் தொகையானது 284 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் பாகிஸ்தானின் GDPற்குச் சமமானதாகும்.
  • GDPயின் அடிப்படையில் G20 நாடுகளிடையே 5வது மிகப்பெரிய நிதித்தொகுப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்