TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆழமான நீர் துறைமுக மைல்கல்

July 11 , 2026 3 days 62 0
  • காமராஜர் துறைமுகமானது 18 மீட்டர் வரைவு திறனைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
  • மூலதனத் தூர்வாரும் திட்டத்தின் ஆறாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இந்த மைல்கல்லை இது எட்டியுள்ளது.
  • இந்தத் துறைமுகம் இப்போது 1,70,000 டெட்வெயிட் டன் (DWT) வரையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் கேப்சைஸ் (Capesize) ரகக் கப்பல்களைக் கையாளும் திறனைப் பெற்றுள்ளது.
  • 18 மீட்டர் வரைவு திறன் என்பது, துறைமுகத்திற்குள் பெரிய மற்றும் ஆழமான கப்பல்கள் நுழைவதற்கு அனுமதிப்பதோடு, சரக்கு கையாளும் திறனையும் மேம்படுத்துகிறது.
  • 18 மீட்டர் வரைவு திறனைக் கொண்ட இந்தியாவின் முதல் பெரிய துறைமுகம் விசாகப் பட்டினம் துறைமுகமாகும்.
  • முன்பு எண்ணூர் துறைமுகம் என்று அழைக்கப்பட்ட காமராஜர் துறைமுகம், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளதுடன் இதுவே இந்தியாவின் முதல் பெரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெரிய துறைமுகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்