இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வின் (ASUSE) 2025 ஆம் ஆண்டு தரவைப் பயன்படுத்தி, தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) இணைக்கப் படாத விவசாயம் அல்லாத துறைக்கான இந்தியாவின் முதல் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை வெளியிட்டது.
இந்த மதிப்பீடுகள் 770 மாவட்டங்களில் 757 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நிறுவனங்கள், தொழிலாளர்கள், பெண்களின் பங்கேற்பு மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) குறித்த தரவுகளை உள்ளடக்கியுள்ளது.
இத்துறையின் நிறுவனங்கள், பணியாளர்கள் மற்றும் GVA ஆகியவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முதல் 50 மாவட்டங்களில் உள்ளன.
237 மாவட்டங்களில் பெண்கள் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களாக உள்ளனர் அதே நேரத்தில் 25 மாவட்டங்களில் அவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.
280 மாவட்டங்களில், ஒரு தொழிலாளருக்கான GVA அகில இந்திய சராசரியான ₹1,56,539-ஐ விட அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிற சேவைகளை உள்ளடக்கியுள்ளது.