January 30 , 2026
17 hrs 0 min
11
- சம்பல் நதிக்கு அடுத்தபடியாக, பீகாரில் உள்ள கண்டக் நதி இந்தியாவின் இரண்டாவது பெரிய கங்கை நீர் முதலைகள் வாழ்விடமாக மாறியுள்ளது.
- கண்டக் நதி பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டம் வழியாக இந்தியா-நேபாள எல்லையில் பாய்கிறது.
- முதிர்ந்த முதலைகளின் எண்ணிக்கை 2015ல் 54லிருந்து 2025ல் 400க்கும் அதிகமாக அதிகரித்தது என்பதோடு குட்டிகள் உட்பட மொத்த எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது.
- 2015 மற்றும் 2025க்கு இடையில், 326 கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றின் பகுதியில் சுமார் 944 முதலைகள் விடுவிக்கப்பட்டன.
- இந்த ஆறு வால்மீகி புலிகள் காப்பகத்தின் வழியாகச் செல்வதால், நீர்வாழ் உயிரினங்களுக்கு உகந்த சூழலை வழங்குகிறது.
- இந்தியாவின் முதல் கங்கை நீர் முதலை காப்பினப் பெருக்கத் திட்டம் 1975 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள திக்கர்பாடாவில் தொடங்கப்பட்டது.

Post Views:
11