April 14 , 2025
                                                                          204 days 
                                      228
                                    
                                   
								   
                                
                                
                                    
	- 2024-25 ஆம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் 1,681 இரயில் என்ஜின்களை இந்தியா உற்பத்தி செய்துள்ளது.
 
	- இது 2023-24 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1,472 என்ஜின்களுடன் ஒப்பிடும் போது அதைவிட 209 என்ஜின்கள் அல்லது 19% அதிகமாகும்.
 
	- இந்த மிகவும் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி என்பது இந்தியாவின் என்ஜின் உற்பத்தியில் இதுவரையில் பதிவாகாத அளவிற்கு அதிகமாகும்.
 
	- இது அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களின் மொத்த என்ஜின் உற்பத்தியை விட அதிகமாகும்.
 
	- 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 470 என்ற தேசிய வருடாந்திரச் சராசரியுடன் இந்தியா மொத்தம் 4,695 என்ஜின்களை உற்பத்தி செய்தது.
 
	- 2014 முதல் 2024 ஆம் காலக் கட்டத்தில் இது 917 ஆக உயர்ந்தது.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                228