இந்தியாவின் இலகுரகச் செயல்திறனுடைய உறுதியான சக்கர நாற்காலி
July 21 , 2025 5 days 25 0
சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, பிறரைச் சார்ந்திராத வகையில் சுதந்திரத்தை அளிக்கின்ற 8.5 கிலோ எடையுள்ள புதிய சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் சமீபத்தியக் கண்டுபிடிப்பான YD One ஆனது இந்தியாவின் அதி இலகுரக செயல் திறனுடைய உறுதியான சக்கர நாற்காலி என்று நிறுவனம் கூறுகிறது.
இந்தச் சாதனம் ஆனது விண்வெளிப் பயன்பாட்டுத் தரப் பொருளால் ஆன ஒற்றைச் சட்டத்தைக் கொண்டுள்ளது.
சந்தையில் உள்ள பெரும்பாலான சக்கர நாற்காலிகள் என்பவை மிகவும் கனமான மற்றும் மருத்துவமனை தரத்தில் இருந்தன என்பதோடு அவை பொதுவெளி பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்த தகுதியற்றவையாகும்.