ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதி அருகே நடைபெற்ற ராம்சர் உடன்படிக்கையின் 15வது பங்குதாரர்கள் மாநாட்டில் (CoP15) ஈரநிலங்களை மிகவும் முறையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு நீடித்த நிலையான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவது குறித்த தீர்மானத்தை இந்தியா முன்வைத்தது.
இந்தத் தீர்மானமானது 172 நாடுகள் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களின் வலுவான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் மற்றும் சமூகங்களின் தினசரி தேர்வுகள் ஈரநிலங்களைப் பாதுகாக்க எவ்வாறு உதவுகின்றன என்பதை இந்தத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் UNFCCC உடன்படிக்கையின் 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் (CoP26) பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட LiFE திட்டம் மூலம் இந்தியா இதனை ஊக்குவிக்கிறது.
LiFE திட்டம் ஆனது மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழலுக்காக வேண்டி நடவடிக்கையினை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.
இந்தியாவின் ஈரநில நடவடிக்கைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வலர்களை ஈடுபடுத்தியுள்ளன.
இந்த முன்னெடுப்புகள் ஆனது, சுமார் 170000க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை வரைபடமாக்கவும், 120000 ஈரநிலங்களுக்கான தெளிவான எல்லைகளைக் குறிக்கவும் உதவியது.