இந்தியாவின் உணவு தானிய இருப்பு, தேவையான கையிருப்பு அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 222 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கோதுமை மற்றும் 380 LMT அரிசி உட்பட மொத்தம் 602 LMT உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன.
உணவுப் பாதுகாப்பு, விலை நிலைப்படுத்தல் மற்றும் பொது விநியோக முறையின் (PDS) மூலம் விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் இடையக இருப்பு பராமரிக்கப்படுகிறது.
பருப்பு வகைகள் (25.68 மில்லியன் டன் (MT)) மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது.
தோட்டக்கலை உற்பத்தி 362.08 MT-ஐ எட்டியுள்ளது, இது உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாக உள்ளதோடு அதிக மதிப்புள்ளப் பயிர்களை நோக்கிய மாற்றத்தையும் காட்டுகிறது.
2020 ஆம் நிதியாண்டில் (FY) 34.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (USD) இருந்த விவசாய ஏற்றுமதி 2025 நிதியாண்டில் 51.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதோடுஇதில் பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 20.4% ஆகும்.
மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் உற்பத்தியிலும் இந்தியா முன்னணியில் உள்ளதோடுகரும்பு, பருத்தி மற்றும் தேயிலை உற்பத்தியிலும் 2-வது இடத்தில் உள்ளது.