TNPSC Thervupettagam

இந்தியாவின் உரத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வு

October 22 , 2025 14 days 46 0
  • இந்தியாவில் உர மானியங்கள் ஆனது நைட்ரஜன் அல்லது யூரியா ஆகியவற்றின் மீதே அதிகளவில் வழங்கப்படுகின்றன.
  • பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்துடன் ஒப்பிடும் போது குறைந்த விலை காரணமாக யூரியாவின் அதிகப்படியான பயன்பாடு ஆனது, ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு மற்றும் தேக்க நிலையிலான பயிர் விளைச்சலை ஏற்படுத்துகிறது.
  • வேளாண் உற்பத்தித்திறன் குறைவதால் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்காக இந்தியா இறக்குமதியை அதிகளவில் சார்ந்துள்ளது.
  • விவசாயிகள் டிஜிட்டல் விற்பனை நிலையங்கள் மூலம் மானிய விலையில் அதனை அணுகுவதுடன், மொத்த உர மானியக் கட்டணத்தில் யூரியாவின் பங்கு கிட்டத்தட்ட 70% ஆகும்.
  • இறக்குமதியைக் குறைப்பதற்காக உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து புதிய யூரியா ஆலைகளில் ஆண்டுதோறும் 6.5 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்திய மண்ணில் சுமார் 43% துத்தநாகக் குறைபாடு உள்ளது என்ற நிலையில்  கிட்டத் தட்ட 18% போரான் பற்றாக்குறை உள்ளது என்பதோடு மேலும் இது மண்ணின் ஆரோக்கியத்தையும் பயிர் உற்பத்தியையும் மோசமாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்