உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) உலகளாவிய ஊக்கமருந்து தடுப்பு நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வலையமைப்பின் (GAIIN) மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தியா ஊக்க மருந்து பரிசோதனைகளை 2019 ஆம் ஆண்டில் சுமார் 4,000 என்பதில் இருந்து கடந்த ஆண்டு சுமார் 8,000 ஆக அதிகரித்துள்ளது.
சாதகமற்ற பகுப்பாய்வு முடிவுகள் (AAF) 5.6% இலிருந்து 2% க்கும் கீழாகக் குறைந்து உள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வை பரப்புகிறது.
ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் வலுவான விசாரணைகள் குறித்து இம்மாநாட்டில் நாடுகள் விவாதித்தன.