உலக நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாடானது இந்தியாவின் எஃகுத் தேவை குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நாட்டின் எஃகுத் தேவை தொடர்ந்து அதிகரித்தால், எஃகுத் துறையிலிருந்துப் பெறப்படும் CO2 வெளியேற்றமானது 2050 ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் டன்களை எட்டும்.
ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) 'குறைந்த கார்பன் பயன்பாட்டைக் கொண்ட எஃகுத் துறையை நோக்கி' என்ற அறிக்கையின்படி, தற்போது எஃகுத் துறையிலிருந்து பெறப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றமானது 242 மில்லியன் டன்கள் ஆகும்.
TERI அமைப்பானது 2030 ஆம் ஆண்டு முதலாக CO2 உமிழ்வுகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கின்றது.
தொழில் நிறுவனங்கள் கார்பன் நீக்கத் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற இந்த அமைப்பு கட்டாயப்படுத்தும்.