TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணிமத் துறைத் திட்டப் பலன்களின் மூலம் பெற்ற தகவல்களைத் தொகுக்கச் செய்தல் – அறிக்கை

April 16 , 2023 842 days 314 0
  • சர்வதேச நாணய நிதியமானது, ‘இந்தியாவின் எண்ணிமத் துறைத் திட்டப் பலன்களின் மூலம் பெற்ற தகவல்களைத் தொகுக்கச் செய்தல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
  • இதன் படி உலகத் தரத்திலான ஒரு எண்ணிமப் பொது உள்கட்டமைப்பினை இந்தியா உருவாக்கி உள்ளது.
  • இது வாழ்க்கை நிலை மற்றும் பொருளாதாரத்தினை மாற்றியமைக்கச் செய்வதோடு,  பல நாடுகளுக்கு இது ஒரு படிப்பினையாக விளங்கும்.
  • இந்தியத் தொகுப்பு என்பது இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணிமப் பொது உள்கட்டமைப்புகளுக்கான (DPIs)  ஒரு தொகுப்புப் பெயராகும்.
  • இது மூன்று வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
    • தனிப்பட்ட அடையாளம் (ஆதார்),
    • சிறப்பானப் பண வழங்கீட்டு முறைகள் (ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடை முகம், ஆதார் பண வழங்கீட்டு இணைப்பு, ஆதார் இணைக்கப்பட்ட பண வழங்கீட்டுச் சேவை), மற்றும்
    • தரவுப் பரிமாற்றம் (டிஜிலாக்கர் மற்றும் கணக்குத் திரட்டுச் செயலிகள்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்