TNPSC Thervupettagam

இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி

August 21 , 2026 3 days 25 0
  • 2025–26 ஆம் ஆண்டில் இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 25.6% உயர்ந்து 5.1 பில்லியன் டாலரை எட்டியுள்ளதுடன் இது நாட்டின் சிறந்த வேளாண் ஏற்றுமதிப் பொருளாக மாறியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 66.6% உயர்ந்து கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலராக இருந்தது, சராசரி மதிப்பு டன் ஒன்றுக்கு $4,392 ஆக உயர்ந்தது.
  • வியட்நாம் மற்றும் மலேசியாவுடன் எகிப்து, உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் முக்கிய கொள்முதல் நாடுகளாக மாறியதன் மூலம் ஏற்றுமதி சந்தைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் ஏற்றுமதிக்காக APEDA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 83 ஒருங்கிணைந்த இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன.
  • எருமை இறைச்சியானது ஏற்றுமதி, வயதான, மலட்டுத்தன்மை கொண்ட அல்லது குறைந்த பால் தரும் எருமைகளுக்குச் சந்தையை வழங்குவதன் மூலம் பால் பண்ணைத் துறைக்கு ஆதரவு அளிப்பதுடன் இது விவசாயிகள் அவற்றை மாற்றி உற்பத்தி திறன் கொண்ட விலங்குகளை வாங்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்