TNPSC Thervupettagam

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சி

April 14 , 2026 2 days 87 0
  • உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிப்புடன், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் 2-வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவின் மீன்வளத் துறை சுமார் 30 மில்லியன் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
  • மீன் உற்பத்தி 141.64 லட்சம் டன்களில் (2019-20) இருந்து 197.75 லட்சம் டன்களாக (2024-25) அதிகரித்துள்ளது.
  • உறைந்த இறால் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாகவும், 350-க்கும் மேற்பட்ட கடல் உணவு வகைகள் சுமார் 130 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலமாகவும், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ₹62,408 கோடியைத் (2024-25) தாண்டியுள்ளது.
  • அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்