TNPSC Thervupettagam

இந்தியாவின் கருவுறுதல் விகிதம்

June 1 , 2026 13 days 160 0
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகமானது அண்மையில் 'மாதிரி பதிவு முறை (SRS) புள்ளிவிவர அறிக்கை 2024'-ஐ வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2024 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைகளாகக் குறைந்துள்ளது என்பதோடு இது மாற்று நிலை அளவான 2.1-ஐ விடக் குறைவு ஆகும்.
  • குழந்தை இறப்பு விகிதம் (IMR) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 24 இறப்புகளாக மேம்பட்டுள்ள அதே நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 28 இறப்புகளாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் நடைபெறும் பிரசவங்களில் சுமார் 95.4% பிரசவங்கள் மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் நடந்துள்ளன என்ற நிலையில் இது தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளுக்கான மேம்பட்ட அணுகலைக் காட்டுகிறது.
  • உழைக்கும் வயதினரின் மக்கள் தொகை (15-59 ஆண்டுகள்) 66.4%-ஆக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 9.7%-ஐ எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்