உலகளாவிய காட்டுத்தீ மேலாண்மையை வலுப்படுத்துவது குறித்த இந்தியாவின் தீர்மானம் கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையில் (UNEA-7) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தத் தீர்மானம் சர்வதேச ஒத்துழைப்பு, முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் காட்டுத்தீ மேலாண்மைக்கான ஆபத்து மதிப்பீட்டை ஊக்குவிக்கிறது.
இது தடுப்பு, தீக்குப் பிந்தைய மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கான பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
தேசிய மற்றும் பிராந்திய அளவிலான காட்டுத்தீ செயல் திட்டங்களுக்கும் பலதரப்பு நிதியுதவிக்கான அணுகலுக்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.
இந்தியாவில், 36% காடுகள் தீ விபத்துக்கு ஆளாகின்றன என்பதோடுஅவற்றில் 4% மிகவும் அபாயகரமான மற்றும் 6% மிகவும் அபாயகரமான (ISFR 2019) நிலையில் உள்ளன.