TNPSC Thervupettagam

இந்தியாவின் காபி ஏற்றுமதி

June 26 , 2025 8 days 52 0
  • கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 125% அதிகரித்துள்ளது.
  • தற்போது 2023–24 ஆம் ஆண்டில் இது 1.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • இது 2014–15 ஆம் ஆண்டில் 800 மில்லியன் டாலர்களிலிருந்து உயர்ந்துள்ளது.
  • இது இந்தியாவின் நிலையை உலகளவில் 5வது மிகப் பெரிய காபி ஏற்றுமதியாளராக உயர்த்தியது.
  • இந்தியா தற்போது 7வது பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது.
  • இந்தியா அதன் வருடாந்திர உற்பத்தியான 3.5 லட்சம் டன்களை விட மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலாக ஏற்றுமதி செய்கிறது.
  • இந்தியாவின் காபி வகையில் சுமார் 75% ஆனது முதன்மையாக மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வளர்க்கப்படுகின்ற அரபிகா மற்றும் ரோபஸ்டா என்ற காப்பி கொட்டை வகைகள் ஆகும்.
  • 2022–23 ஆம் ஆண்டில் 248,020 மெட்ரிக் டன்களுடன் கர்நாடகா தேசிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட சில முக்கியச் சந்தைகளுடன் ஐரோப்பா தொடர்ந்து முன்னணி ஏற்றுமதி இடமாக உள்ளது
  • உலகளவில் முன்னணித்துவத்தினைத் தக்க வைத்து பிரேசில் உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராகத் தொடர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்