2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 2 மில்லியன் உயிரிழப்புகள் காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டுள்ளன.
இந்த உயிரிழப்புகளில் சுமார் 90% இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நீரிழிவு மற்றும் மறதி நோய் (டிமென்ஷியா) போன்ற தொற்றாத நோய்களால் ஏற்பட்டவையாகும்.
இந்தியாவில் 100,000 பேருக்கு தோராயமாக சுமார் 186 காற்று மாசுபாடு தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உயிரிழப்புகளில் சுமார் 70% காற்று மாசுபாட்டால் ஏற்படுகிறது.
இது நுரையீரல் புற்றுநோய் உயிரிழப்புகளில் தோராயமாக 33%, இதய நோய் உயிரிழப்புகளில் 25% மற்றும் நீரிழிவு தொடர்பான உயிரிழப்புகளில் 20% என்று பங்களிக்கிறது.
இந்தியாவில் PM2.5 அளவுகள் உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர உமிழ்வு வழி காட்டுதலை விட எட்டு மடங்கும் மற்றும் 24 மணி நேர வழி காட்டுதலை விட நான்கு மடங்கு அதிகமாகவும் உள்ளன.