இந்தியாவின் காற்று மாசுபாட்டிற்கான மூல ஆதாரம்
July 5 , 2025
14 hrs 0 min
19
- இந்தியாவின் PM2.5 மாசுபாட்டில் அம்மோனியம் சல்பேட் ஒரு முக்கிய இரண்டாம் நிலை மாசுபடுத்தியாக உள்ளது.
- சல்பர் டை ஆக்சைடு (SO₂) மற்றும் அம்மோனியா (NH₃) காற்றில் வினைபுரியும் போது இது உருவாகிறது.
- இந்த மாசுபடுத்தியானது இந்தியாவின் மொத்த PM2.5 அளவுகளில் சுமார் 34% என்ற பங்கினைக் கொண்டுள்ளது.
- SO₂ உமிழ்வின் மிகவும் முக்கிய ஆதாரம் ஆனது நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் ஆகும்.
- இந்தியாவில் SO₂ உமிழ்வுகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஆலைகளிலிருந்து வெளியாகின்றன.
- 8% ஆலைகளில் மட்டுமே கனல் வாயு சல்பர் நீக்க (FGD) அமைப்புகள் உள்ளன.
- நிலக்கரி ஆலைகளுக்கு அருகில், அதாவது 10 கிலோ மீட்டருக்குள் சுமார் 2.5 மடங்கு அதிகமான அளவில் மாசுபாடு அதிகமாக உள்ளது.
- காற்று வழியாக பரவும் இந்த மாசுபாட்டால் தொலைதூர நகரங்கள் கூட பாதிக்கப் படுகின்றன.
- மாசுபட்ட 130 நகரங்களில் 114 நகரங்களில் அம்மோனியம் சல்பேட்டிலிருந்து வெளியாகும் மாசுபாட்டினால் 30% PM2.5 அதிகமாகக் காணப்படுகிறது.
- அம்மோனியம் நைட்ரேட்டும், சில நேரங்களில் 50% வரை PM2.5 மாசுபாட்டில் சேர்க்கப் படுகிறது.

Post Views:
19