TNPSC Thervupettagam

இந்தியாவின் குடிமைப் பதிவு முறை பற்றிய அறிக்கை

May 8 , 2022 1135 days 1182 0
  • பிறப்பு மற்றும் இறப்பு அறிக்கைகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின் குடிமைப் பதிவு முறை அறிக்கையினை மத்திய அரசு வெளியிட்டது.
  • 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் இறப்புப் பதிவு 4.75 லட்சம் அதிகரித்து உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • பீகாரில் இறப்பு விகிதமானது அதிகபட்சமாக 18.3 சதவீதமும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 16.6 சதவீதமும், அசாமில் 14.7 சதவீதமும் அதிகரித்துள்ளது.
  • இறப்பு விகிதத்தில், மணிப்பூர் மாநிலமானது 25.4 சதவிகிதமும், சண்டிகர் மாநிலமானது 22.1 சதவிகிதமும் சரிவினைக் கண்டுள்ளன.
  • தெலுங்கானா மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.0 சதவீதம் வரை குறைந்துள்ளது.
  • அதிகபட்ச பிறப்புப் பாலின விகிதம்: 2020 ஆம் ஆண்டில், லடாக் முதலிடத்திலும் (1104) அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (1011), அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (984), திரிபுரா (974) மற்றும் கேரளா (969) ஆகியவையும் இதில்  இடம்பெற்றுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச பிறப்புப் பாலின விகிதம் பதிவான முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்திலும் (880), அதைத் தொடர்ந்து தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ (898), குஜராத் (909), ஹரியானா (916) மற்றும் மத்தியப் பிரதேசம் (921) ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்