உலகளாவிய பங்குச் சந்தை மூலதனத் தரவரிசையில் இந்தியாவை தென்கொரியா முந்தியதை அடுத்து, இந்தியா 7வது இடத்திற்கு சரிந்தது.
இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மொத்தச் சந்தை மூலதனம் $4.8 டிரில்லியனாக உள்ள நிலையில், தென் கொரியாவில் வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மொத்தச் சந்தை மூலதனம் $5 டிரில்லியனை எட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பங்குகளின் வலுவான ஏற்றத்தால் தென் கொரியாவின் எழுச்சி உந்தப்பட்டது.
முன்னதாக, உலகளாவியச் சந்தை மூலதன தரவரிசையில் இந்தியாவை தைவானும் முந்தியிருந்தது.
2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்குச் சந்தை சுமார் 11% சரிந்துள்ள அதே வேளையில் தென் கொரியாவின் KOSPI குறியீடு வலுவான ஏற்றத்தைப் பதிவு செய்து உள்ளது.