இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.54% ஆகக் குறைந்தது என்ற நிலையில் இது கடந்த 8 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைவான பண வீக்கமாகும்.
இது 2025 ஆம் ஆண்டு முழுவதும் காணப்பட்ட பணவீக்கக் குறைப்புப் போக்கை தொடரும் விதமாக, ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 2.07% என்ற அளவிலிருந்து ஏற்பட்ட சரிவைக் குறிக்கிறது.
உணவு மற்றும் பானங்கள் பணவீக்கம் 1.4% ஆகக் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் ஆனது, 99 மாதங்களில் இல்லாத அளவிற்குக் குறைந்த அளவை எட்டியது.
இது போன்ற ஒரு சூழலிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரித்ததன் காரணமாக, பல்வேறு பொருட்களுக்கான பணவீக்கம் 5.35% ஆக உயர்ந்தது.
2025 ஆம் ஆண்டில் பணவீக்கம் 2 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது இரண்டாவது முறையாகும் என்பதோடு இது குறைந்த விலை நெருக்கடியைக் குறிக்கிறது.