இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் - ஜூன் 2025
June 17 , 2025
18 days
72
- இந்தியாவின் சில்லறைப் பணவீக்க விகிதம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 75 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.8% ஆகக் குறைந்தது.
- கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக இது 3 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது.
- இது கடைசியாக 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதை விடவும் குறைவாக இருந்தது.
- இது நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின் படி வழங்கப்பட்டுள்ளது.
- இதில் சில காய்கறிகளின் விலைகள் அதிகரித்த போதிலும், உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைவதே இந்தச் சரிவுக்கு முதன்மையாகக் காரணமாகும்.
- இருப்பினும், சமையல் எண்ணெய்கள் மற்றும் பழங்களில் பதிவான இரட்டை இலக்கப் பணவீக்கம் ஆனது பரந்த மிதமான தன்மையை ஓரளவு ஈடுகட்டியது.

Post Views:
72