2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரதான சில்லறைப் பணவீக்க விகிதமானது, எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.55 சதவீதமாகக் குறைந்தது.
இது தேசியப் புள்ளி விவர அலுவலகத்தின் (NSO) நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படுகிறது.
தற்போது அது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் இணக்கமான பணவீக்க இலக்கான 2 சதவீதம் முதல் 6 சதவீதம் என்ற குறைந்தபட்ச மதிப்பு வரம்பிற்குள் வந்துள்ளது.
இதுவரை 2025-26 ஆம் ஆண்டில், CPI பணவீக்கம் ஆனது சராசரியாக 2.4 சதவீதமாக உள்ளது.
இந்திய நுகர்வோர் பயன்பாட்டிற்காக வாங்கும் உணவு, மருத்துவ பராமரிப்புப் பொருட்கள், கல்வி, மின்னணுவியல் போன்ற சரக்குகள் மற்றும் சேவைகளின் விலையில் உள்ள வேறுபாட்டை CPI கணக்கிடுகிறது.
CPI ஆனது உணவு மற்றும் பானங்கள், எரிபொருள் மற்றும் மின்விளக்குகள், வீட்டுவசதி மற்றும் ஆடை, படுக்கை மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல சார்பு நிலைப் பயன்பாட்டுப் பொருட்களின் குழுக்களைக் கொண்டுள்ளது.