நாட்டின் தற்போதைய நிலை இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட நிலை, அவசர மற்றும் விபத்துச் சிகிச்சை மையங்களின் நிலை என்று தலைப்பிடப்பட்ட இரு விரிவான அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இது புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் அவசர மருத்துவ சிகிச்சைத் துறையினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையானது நாட்டிலுள்ள இரண்டாம், மூன்றாம் மற்றும் மாவட்ட நிலை மருத்துவமனைகளிலுள்ள அவசர மற்றும் விபத்து சிகிச்சைகளின் நிலையை மதிப்பிட்டது.
இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில், 3% முதல் 5% படுக்கைகள் மட்டுமே அவசரப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள 88% மருத்துவமனைகள் தனக்கென்று அவசர ஊர்திகளைக் கொண்டு இருந்தாலும், அவற்றுள் 3% மட்டுமே அவசர ஊர்தியில் சேவையை வழங்குவதற்கான பயிற்சியினைப் பெற்ற பாராமெடிக்கல் துறையினரைக் கொண்டுள்ளன என்று இந்த அறிக்கை கண்டறிந்தது.
சுமார் 94% மருத்துவமனைகள் நோயாளியின் அருகிலேயே போதிய சோதனைகளை மேற்கொள்ளும் சாதனங்கள் இன்றியும், 74% மருத்துவமனைகள் தனக்கென அவசர ஊர்தி சேவை இன்றியும் 68% மருத்துவமனைகள் அவசரத் துறைக்கென போதிய இட வசதி இன்றியும் உள்ளன.