ஆண்டுதோறும் சூரியசக்தித் திறன் சேர்ப்பதில் அமெரிக்காவை முந்தி, 2025 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சூரியசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் திறன் 2014-ஆம் ஆண்டில் 2.8 கிகாவாட்டிலிருந்து (GW) 2025-ஆம் ஆண்டில் 155 GW-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இக்காலகட்டத்தில் நாட்டின் சூரியசக்தித் திறன் சுமார் 5,370% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் இந்தியா 50%-ஐத் தாண்டியுள்ளது.
பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சூரிய சக்தியை ஏற்றுக்கொண்டுள்ளன.