இந்தியாவின் நிறுவப்பட்ட தரவு மையத் திறன் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.57 GW ஆக அதிகரித்துள்ளது மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 8 GW ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேகக் கணினி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சேவைகள் காரணமாக, இந்தியாவின் தரவு மையத் திறன் 2020 ஆம் ஆண்டில் சுமார் 375 MW இலிருந்து 2026 ஆம் ஆண்டில் 1.57 GW ஆக அதிகரித்துள்ளது.
இத்துறையில் ஏற்கனவே சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப் பட்டுள்ளதுடன் மேலும் 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
தேசிய தகவல் மையம் (NIC) டெல்லி, புனே, ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் தேசிய தரவு மையங்களையும், 37 சிறிய மையங்களையும் இயக்குகிறது.
தரவு மையங்களின் மின்சாரத் தேவை 2031-32 ஆம் ஆண்டளவில் 17 GW ஐ எட்டக்கூடும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திறமையான குளிரூட்டல் மற்றும் வளப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான கவனத்தை அதிகரிக்கிறது.