இந்தியாவின் தரவுத் தரம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை
June 29 , 2025 3 days 84 0
நிதி ஆயோக் அமைப்பானது, "India’s Data Imperative: The Pivot Towards Quality" என்ற தலைப்பிலான மூன்றாவது அறிக்கையினை வெளியிட்டது.
சிறந்த எண்ணிம நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்காக என்று தரவுத் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது.
தரவை அளவிட்டு மேம்படுத்தவும் உதவும் வகையில் தரவு-தர மதிப்புக் கட்டமைப்பு மற்றும் தரவு-தர மேலாண்மை திறன் கட்டமைப்பு போன்றச் செயற்கருவிகளை இது அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவின் தரவு சார் சூழல் அமைப்பில் ஆதார், UPI, ஆயுஷ்மான் பாரத் மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் 1.2 பில்லியன் கைபேசிப் பயனர்கள் மற்றும் 800 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்.
மோசமான தரவுத் தரமானது பிழைகள் மற்றும் நகல்களின் காரணமாக 4 முதல் 7% வரை அதிகப்படியான நலத்திட்டச் செலவினங்களுக்கு வழி வகுக்கிறது என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.