தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் மின்சாரத் தேவையின் உயர்வைப் பூர்த்தி செய்ததால், 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் நிலக்கரி மின் உற்பத்தி இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் பதிவு செய்ய வில்லை.
2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு (2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை) மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு (2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை) இடையே, மின் உற்பத்தி 7% அல்லது சுமார் 63 டெராவாட்-மணிநேரம் (TWh) அதிகரித்துள்ளது.
இந்த முழுமையான அதிகரிப்பும் சூரிய ஒளி, காற்று, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி போன்ற புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
இக்கால கட்டத்தில் இந்தியா சுமார் 77 ஜிகாவாட் சூரிய சக்தி, 11 ஜிகாவாட் காற்றாலை, 5 ஜிகாவாட் நீர்மின்சாரம் மற்றும் 0.6 ஜிகாவாட் அணுசக்தி திறனை சேர்த்துள்ளது.
அதிக மின் தேவை இருந்தபோதிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மின் துறையின் கார்பன் டை ஆக்சைடு (CO₂) உமிழ்வுகள் 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் அதே அளவிலேயே பரவலாக இருந்தது.
இருப்பினும், முக்கியமாக எஃகு மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களால் 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஒட்டு மொத்த இந்திய உமிழ்வுகள் 3.7% அதிகரித்து உள்ளது.