இந்தியாவின் தூய்மையான எரிசக்தி சேமிப்பு இலக்கு 2035-36
June 27 , 2026 89 days 201 0
எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்விநியோகத் தொகுப்பு நிலைத் தன்மையை வலுப் படுத்துவதற்காக, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) புனல் மின் சேமிப்புத் திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கான வழிகாட்டி வரைபடத்தை மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மின்சார வாரியம் (CEA) தயாரித்துள்ளது.
புனல் மின் சேமிப்பு முறையானது, அதிக தேவை உள்ள காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்கவும் உற்பத்தி செய்யவும் வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர்த் தேக்கங்களைப் பயன்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்தியா சுமார் 7.2 ஜிகாவாட் செயல் பாட்டுத் திறனையும், 11.6 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ள திறனையும் கொண்டு உள்ளது.
இந்தியாவின் மொத்த நீர்மின் திறன் சுமார் 56.3 ஜிகாவாட்டாக உள்ளதுடன் மேலும் இதனை விரிவாக்குவதற்கான கணிசமான பயன்படுத்தப் படாத சாத்தியக் கூறுகள் உள்ளன.