தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி மீதான தேசிய திட்டத்தின் கீழ், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் (NDL - National Digital Library) என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ஒற்றைச் சாளரத் தேடல் வசதியுடன் கற்றல் வளங்களின் மெய்நிகர் களஞ்சியமாக இருக்கும்.
NDL ஆனது உமாங் (நவீன கால நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலி) என்ற செயலியுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
NDL இல் 3 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் வளங்கள் உள்ளன. அதன் உள்ளடக்கங்கள் கல்வியின் அனைத்து முக்கியக் களங்களையும் கற்பவர்களின் அனைத்து முக்கிய நிலைகளையும் உள்ளடக்குகின்றன.