இந்தியாவின் நதி புத்துயிர்ப்புத் திட்டம் - ஒப்பந்தம்
February 20 , 2019 2420 days 872 0
இந்திய – ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிப் பங்குரிமைக் கட்டமைப்பின் (India-EU water partnership - IEWP) கீழ் இந்தியாவின் நதிப் புத்துயிர்ப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக இந்தியாவுடன் 3 ஐரோப்பிய நாடுகள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது நதிப் புத்துயிர்ப்புத் திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய புத்தாக்கத் தொழில்நுட்பங்களின் செயல்படுத்துதலை ஏற்படுத்தும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் IEWP மற்றும் ஜெர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து, சர்வதேச அமைப்புகள் மற்றும் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றிற்குகிடையே 4-வது இந்திய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிகள் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
4-வது இந்திய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான நதிகள் மன்றம் என்பது புது தில்லியில் TERI அமைப்பாலும் IEWP அமைப்பாலும் இணைந்து நடத்தப் பட்ட உலகின் நீடித்த வளர்ச்சி மேம்பாட்டிற்கான மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.