TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலக்கரி மின் உற்பத்தி

January 24 , 2026 3 days 50 0
  • இந்தியாவின் நிலக்கரி மின் உற்பத்தி சுமார் 50 ஆண்டுகளில் முதல் முறையாக 2025 ஆம் ஆண்டில் ஆண்டாண்டு வீதத்தில் குறைந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கிட்டத்தட்ட 3% குறைந்துள்ளது.
  • இந்த வீழ்ச்சி ஆனது COVID-19 தொற்றுநோய் காலத்தில் 2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக பதிவானதற்கு பிறகு, குறைந்தது அரை நூற்றாண்டில் பதிவான இரண்டாவது முழு ஆண்டு வருடாந்திரச் சரிவு மட்டுமே ஆகும்.
  • இந்தியாவின் மின்சாரத் தேவையை அதிகமாகப் பூர்த்தி செய்யும் தூய்மையான எரிசக்தி (சூரிய, காற்று, நீர், அணுசக்தி) வளர்ச்சியின் அதிகமான வளர்ச்சியே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் ஆகும்.
  • லேசான வானிலை மற்றும் மெதுவான தேவை வளர்ச்சியும் நிலக்கரி உற்பத்தியைக் குறைப்பதற்கு பங்களித்தன.
  • இந்த மாற்றம் இந்தியாவின் மின்சார மூலங்கள் கலவையில் புதைபடிவமற்ற மூலங்களை நோக்கிய பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்